விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாக விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Vijay condolences for Karur incident : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மதியம் 12 மணியளவில் விஜய் கரூர் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு தான் வந்து சேர்ந்தார். அந்தளவிற்கு கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு கூடியிருந்தது. இதனால் கரூரில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது ஆர்வமிகுதியில் முன்னே சென்ற காரணத்தால் கூட்ட நெரிசல் அதிகளவு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் என 35க்கும் மேற்பட்டவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
கரூர் கூட்டத்தில் உயிரிழப்பு- விஜய் வேதனை
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
