தடை செய்யப்படுமா தவெக..? சட்டம் என்ன சொல்கிறது- அதிர்ச்சி ரிப்போர்ட்
கரூரில் ஏற்பட்ட நெரிசலில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என்றும், விதிமீறல்கள் காரணமாக கட்சிக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் செல்லும் இடமெங்கும் மக்கள் கூட்டம் திக்குமுக்காடி வருகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே பல மணிநேரம் தேவைப்படும் நிலை் உள்ளது. இந்த நிலையில் இன்று கரூரில் தமிழக வெற்றிகழகம் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட இந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, 35 பேர் உயிரிழந்துள்ளனர். 6 குழந்தைகள், 16 பெண்கள், மற்றும் 9 ஆண்கள் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 30-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், மற்றும் 74 படுக்கைகள் கொண்ட கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜய்யின் கூட்டத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனை விஜய் ரசிகர்கள் கண்டுகொள்ளாத நிலை தான் நீடித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு கூட்டத்திலும் ஏராளமானோர் மயக்கம் அடைந்து வந்தனர்.
இன்று அதன் உச்சக்கட்டமாக 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். எனவே இந்த உயிரிழப்பிற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்பட வெளியீட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். இதே போல ஐபிஎல் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். எனவே ஆர்சிபி அணியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட முடிவுகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய்யின் தவெகவிற்கு தடை செய்யப்படுமா .? என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனை விஜய்யின் ரசிகர்கள் மதிக்காத நிலை தான் நீடித்து வருகிறது. எனவே நீதிமன்றத்தில் யாராவது தவெகவை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கும் பட்சத்தில் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விஜய்யின் வருகையால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூறு இருப்பதாகவும், உரிய வகையில் போலீசாரின் கட்டுப்பாடுகளை மதிக்கவில்லையெனவும் கூறப்படுகிறது. எனவே இதனையே காரணம் காட்டி தவெகவிற்கு சிக்கல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.