தீபாவளியை முன்னிட்டு மதுரை இனிப்புக் கடைகளுக்கு அதிகாரி எச்சரிக்கை; கேட்காவிட்டால் அபராதம்!!

தீபாவளி பண்டிகை இனிப்புகளில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது என்று மதுரையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

A food safety official in Madurai warned against adding artificial colors to Deepavali sweets

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இனிப்புக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இனிப்புக் கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. முக்கியமாக ஆர்.சி. மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். உணவுப் பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும். அதில், கட்டாயம் உணவு தயாரிப்பு தேதி, காலாவதியான நாள் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை மீறி வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 'கலரிங்' சேர்க்கக் கூடாது. 

Watch : கோவில்பட்டி அருகே திருநங்கைகள் மீது தாக்குதல்! - இருவரை கைது செய்து போலீசார் விசாரணை!

இது நுகர்வோருக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.  இத்துடன்,  அதிரடியாக கடைகளில் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

தீபாவளிக்கு இனிப்பு ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம்'' என்றார்.

Video : மதுரை வண்டியூர் கண்மாயில் சூடு பிடிக்கத் தொடங்கிய மீன் வியாபாரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios