காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் மீது பதிவுத்துறை ஒருங்கிணைப்புக்குழு புகார்!

Tirupattur District Registrar Senthur Pandian : காஞ்சிரபும் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியான கலைச்செல்வன் மீது தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

Registration Department Committee files complaint against Kanchipuram Anti-Corruption DSP Kalaiselvan rsk

Tirupattur District Registrar Senthur Pandian : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக 15 வருடங்களும், DSP ஆக 6 வருடங்களும் கலைச்செல்வன் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களை தொடர்புகொண்டு முறை கேடான ஆவணங்களை பதிவு செய்யும்படி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பதிவாளராக பணியாற்றி வரும் செந்தூரபாண்டியனின் மாமானார் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமோ, நகையோ, பணமோ கைப்பற்றப்படவில்லை. இந்த் நிலையில் கலைச்செல்வன் DVAC-யில் பணிபுரியாத வெளிநபர்களை அழைத்து சென்று அவர்கள் மூலமாக தவறான தகவலை Media-க்கு கசியவிட்டு மாநிலத்தலைவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். மேலும் செந்தூர் பாண்டியனை கைது செய்துவிட்டதாகவும் பொய்யான தகவலை பரப்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர்மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட இருக்கிறது.

உரிமையைக் கேட்கிறோம்; பிச்சையல்ல; மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

முத்திரை கட்டணத்தை குறைவாக பதிவு செய்து ரூ 1.34 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளரான செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய போது முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக செந்தூர் பாண்டியன் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.‌ இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் சோதனை நடத்தினர்.

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்

நடைமுறை தவறு ஏதும் இல்லாத ஆவணப்பதிவில் பொய்ப் புகாரை விசாரிக்க பதிவுத்துறை தலைவர் அனுமதி அளித்தது எப்படி? DVAC-யின் புகாரினை எதிர்த்து செந்தூர் பாண்டியனால் உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண் W.P.No.18072/2024) வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூர் பாண்டியனுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும். தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனை விட ஸ்மார்டாக இருங்கள்! மாணவரின் கேள்விக்கு சத்குரு அளித்த பதில்!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios