தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமக்ரா ஷிக்ஷா அபியான் என்ற மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. பலமுறை தமிழக அரசு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்து மத்திய அரசு அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை விடுவிக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உரிமையைக் கேட்கிறோம்; பிச்சையல்ல; மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!
காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்? தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் மாநிலத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை" என்று அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறினார்.
அரசியல் காரணங்களுக்காகவே தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது என்றும் மத்திய அமைச்சர் விமர்சனம் செய்தார்.
ஸ்மார்ட்போனை விட ஸ்மார்டாக இருங்கள்! மாணவரின் கேள்விக்கு சத்குரு அளித்த பதில்!

