நவ.25 விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம்... அறிவித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்!!

காஞ்சிபுரத்தில் நவ.25 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

nov 25 farmers grievances meet at kanchipuram announced collector

காஞ்சிபுரத்தில் நவ.25 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குள் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: பற்றி எரிந்த கோயில் கோபுரம்… சிவகாரி அருகே நிகழ்ந்த பயங்கரம்!!

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மதுபோதையில் ரகளை செய்தவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர்… வைரலாகும் வீடியோ!!

கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி பதிவுகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார் அட்டை - நகல், சிட்டா, அடங்கல் நகல், நில வரைபடம் - நகல், ரேஷன் கார்டு - நகல், நிலத்தின் பரப்பளவு - பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios