மதுபோதையில் ரகளை செய்தவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர்… வைரலாகும் வீடியோ!!
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் குடிபோதையில் இருந்த ஒருவரைக் கடுமையாகத் திட்டி பேருந்தில் இருந்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் குடிபோதையில் இருந்த ஒருவரைக் கடுமையாகத் திட்டி பேருந்தில் இருந்து கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 477 என்ற வழித்தடத்தில் இயங்கி வரும் அரசு பேருந்தில் பிரகாஷ் என்பவர் நடத்துனராக இருக்கிறார். இந்த பேருந்தில் ஒருவர் மதுபோதையில் ஏறியுள்ளார். அந்த நபரை பேருந்து நடத்துனர் பிரகாஷ் பேருந்தில் இருந்து இறங்க சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்... உதகையை சேர்ந்தவருக்கு தொடர்பா? போலீஸார் அதிரடி!!
அப்போது மதுபோதையில் இருந்த நபர் இறங்க மறுத்துள்ளார். இதை அடுத்து அந்த நபரை கடுமையாக திட்டிய நடத்துனர், அவரை திடிரென பேருந்தில் இருந்து கீழே தள்ளி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. அந்த வீடியோவில், நடத்துனர் குடிபோதையில் இருந்த நபரை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கத்துவதையும், அப்போது நடத்துனர், குடிபோதையில் இருந்த நபரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாகத் தள்ளுவதையும் காணலாம்.
இதையும் படிங்க: 100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி
மேலும் அந்த நபர் தரையில் விழுந்ததை அடுத்து பேருந்து அங்கிருந்து வெளியேறியது. இந்த சம்பவம் குறித்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய பேருந்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுக்குறித்து பேசிய நடத்துனர், பேருந்துக்குள் பயணி ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையை ஏற்படுத்தியதாகவும், இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.