100 நாட்களில் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்..! செந்தில் பாலாஜி உறுதி

ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது மிக அவதூறான கருத்துக்கள் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை யாரும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 
 

Senthil Balaji said that 50000 free electricity connections will be provided in 100 days

இலவச மின்சாரம் ரத்தா.?

மின்துறை திட்டங்கள் தொடர்பாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  மின் நுகர்வோரிடத்தில் ஆதார் எண் இணைப்பு என்பது மின் துறையில் நிகழ் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என கூறினார். மின்சாரத்துறையில் துறையில் 1 கோடியே 15 லட்சம் தரவுகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மின்சாரம் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது, தனியார் கொள்முதல் மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் அளவு , கட்டண அளவுகள் கணக்கிடப்பட்டு மின் துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். இதற்காகவே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும்,  ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது மிக அவதூறான கருத்துக்கள் என தெரிவித்தார். 

தனி தமிழ்நாடு கோரிக்கை..! திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- ஹெச்.ராஜா ஆவேசம்

100 நாளில் 50 ஆயிரம் மின் இணைப்பு

100 யூனிட் மின்சாரம் ரத்து என மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை யாரும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டவர், இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறினார். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த பணி 6 மாதத்தில் நிறைவடைந்ததாக கூறினார். அதனை தொடர்ந்து தற்போது கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றதாகவும், 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். 50 ஆயிரமாவது மின் இணைப்பு பெறும் விவசாயி முதல்வர் ஸ்டாலின் கையால் சான்றிதழை பெறுவார் என கூறினார்.

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜகவை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்

Senthil Balaji said that 50000 free electricity connections will be provided in 100 days

கோவைக்கு புதிய திட்டங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் நடைபெற்ற திட்டங்களை விட இந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் கோவையில் செயல்படுத்தப்பட்டும் என கூறினார். தற்போது 2 லட்சம் மின் கம்பங்கள், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் கையிருப்பு உள்ளதாகவும், பருவமழையை சமாளிக்க முன் ஏற்பாடுகள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டில் 2 லடசத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டில் ஒரு லடசத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி..! இரண்டாவது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios