Asianet News TamilAsianet News Tamil

தனி தமிழ்நாடு கோரிக்கை..! திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- ஹெச்.ராஜா ஆவேசம்

தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு  என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

H Raja demands that Thirumavalavan should be arrested under gangster law
Author
First Published Nov 20, 2022, 12:07 PM IST

ஆர்எஸ்எஸ்க்கு எதிராக திருமாவளவன்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர் போராட்டங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பேரணிக்கு எதிராக பேரணியை அறிவித்தார். மனுஸ்ருமிதி புத்தகத்தை அச்சடித்து பொதுமக்களுக்கும் விநியோகித்தார். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், தமிழ் தேசிய இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது, பெரிய கட்சிகள் செய்ய முடியாததை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும்  தெரிவித்தார். தமிழ் தேசியம் என்கிற பெயரில் பிற இனத்தினர் மீது வெறுப்பை உமிழ கூடாது. தமிழ் தேசியம் சாதி ஒழிப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

H Raja demands that Thirumavalavan should be arrested under gangster law

 தனி தமிழ்நாடு அமைக்க வேண்டும்

தொடர்ந்து பேசியவர், தமிழ் நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார். தமிழ் தேசியத்திற்கு எதிராக திராவிடத்தை  சிலர் பார்க்கிறார்கள் அந்த பார்வை தவறு. ஆனால், திராவிடத்தை எதிராக ஆரியத்தை தான் பார்க்க வேண்டும் எனவும்  திருமாவளவன் கூறியிருந்தார்.  இந்தநிலையில் திருமாவளவன் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஐக மூத்த தலைவர் எச்.ராஜா, டுவிட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

திருமாவளவனை கைது செய்திடுக..

அதில் தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு  என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திருமாவளவன் மீது புகார் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கும் தொடரும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜகவை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios