ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜகவை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்
ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா..விழி! எழு! நட! என மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீதிக்கட்சி துவக்கிய நாள்
நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்றை கொண்டாடும் வகையில் பல்வேறு திராவிட கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..? இரண்டு பேர் காயம்..! சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை
தமிழனை வீழ்த்திட முடியாது
மேலும் தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்! ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட! என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் மிக கன மழைக்கான எச்சரிக்கை வாபஸ்..? இந்திய வானிலை மையம் கூறிய புதிய தகவல்