பற்றி எரிந்த கோயில் கோபுரம்… சிவகாசி அருகே நிகழ்ந்த பயங்கரம்!!
சிவகாசியில் உள்ள கோயில் கோபுரம் ஒன்று பற்றி எரியும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சிவகாசியில் உள்ள கோயில் கோபுரம் ஒன்று பற்றி எரியும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக கோபுரங்கள் துணிகளால் மறைக்கப்பட்டுள்ளது. அதற்காக கம்புகளால் சாரமும் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் ரகளை செய்தவரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துனர்… வைரலாகும் வீடியோ!!
மறுபுறம் கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோயில் அருகே சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ராக்கெட் விட்டதில் அதிலிருந்து வந்த தீப்பொறி கோயில் கோபுரத்தில் இருந்த துணி மீது பட்டு தீப்பற்றியது.
இதையும் படிங்க: மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்... உதகையை சேர்ந்தவருக்கு தொடர்பா? போலீஸார் அதிரடி!!
இது வேகமாக கோபுரம் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை வேகமாக அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.