Viral Video: “கண்கெட்ட பின்பே நமஸ்காரம்” கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் பெண்ணுக்கு பலத்த காயம்

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்து பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

Woman Falls into Manhole on 100 Feet Road, Gandhipuram, Coimbatore vel

கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காந்திபுரம் 100 அடி சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டது. பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்து இருந்ததால் அவற்றை அகற்றிவிட்டு புதிய மூடிகள் பொறுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதனால் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை குழிகள் திறந்த நிலையில் இருப்பது  குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.

சினிமா காட்சிகளை மிஞ்சிய கோவை கொள்ளை முயற்சி சம்பவம்; இராணுவ வீரர் அதிரடி கைது

இதனிடையே கடந்த 16ம் தேதி மாலை அந்தவழியே நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் காலில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

கருவில் சுமந்த தாயை கருவறையில் வைத்து அழகு பார்க்கும் மகன்கள்; சிவகங்கையில் தாய்க்கு கோவில் கட்டிய மகன்கள்

இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதான நிலையில், கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளிலும் உடனடியாக சிலாப்புகள் போட்டு குழிகளை மூடினர். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னதாக பாதாள சாக்கடை குழிகளை  மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்திய  நிலையில் , மாநகராட்சி நிர்வாகம் அவற்றை மூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios