கோவையில் பட்டாகத்திகளுடன் வீடியோ வெளியிட்ட பெண் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 

கோவையில் பட்டாகத்திகளுடன் வீடியோ வெளியிட்ட பெண் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். கோவையில் முன் பகை காரணமாக முக்கிய பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதுபோல் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இளம் பெண் ஒருவர் பிரண்ட்ஸ் கால் மி தமன்னா என்ற இன்ஸ்டாகிராம் பெயரில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: தூங்கிக்கொண்டிருந்த மருமகள் முகத்தில் ஆசிட் ஊற்றிய மாமியார் கைது

அதில் எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம் என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் ரீல்ஸ் செய்திருந்தார். மேலும் இந்த பெண் அன்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்ய நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்தப் பெண் விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த வினோதினி என்பதும் 25 வயது நிரம்பிய பெண் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த நிலையில் மாநகர போலீசார் வினோதினி மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ஆயுதங்களுடன் தான் ரீல் செய்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த வீடியோ எனவும், trending கிற்காக செய்த வீடியோக்கள் எனவும், தற்போது தான் தனது கனவுகளுடன் ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

View post on Instagram