தூங்கிக்கொண்டிருந்த மருமகள் முகத்தில் ஆசிட் ஊற்றிய மாமியார் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றியும், வாயில் கொசு மருந்து தெளித்தும் கொலை செய்ய முயன்ற மாமியாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கலிவரதன், ஆண்டாள் தம்பதியின் மகனான முகஷே் ராஜூ என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருவதாகவும், அவ்வபோது கிடைக்கும் விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த மாமியார் ஆண்டாள் கிருத்திகா தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை கிரு்ததிகாவின் முகத்தில் ஊற்றியுள்ளார். மேலும் கொசு விரட்ட பயன்படுத்தப்படும் கொசு மருந்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அலறி துடித்த கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிட் ஊற்றப்பட்டதில் கிருத்திகா ஒரு கண் பார்வையை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆண்டாளை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாமியார், மருமகள் இடையேயான மோதல் ஆசிட் வீச்சு வரை சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூரில் கடைக்கு சென்ற சிறுவன் மதுபாட்டிலால் குத்தி கொலை; போதை ஆசாமிகள் வெறிச்செயல்