Asianet News TamilAsianet News Tamil

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை; களத்தில் இறங்கி தூய்மை படுத்திய பெண் கவுன்சிலர்

கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணியை மேற்கொள்ளப்படாததால், பெண் கவுன்சிலர் ஒருவர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டது வைரலாகி வருகிறது. 

woman councillor start a cleaning work in coimbatore corporation
Author
First Published Apr 17, 2023, 4:17 PM IST | Last Updated Apr 17, 2023, 4:17 PM IST

கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி  அதிகாரிகளுக்கு, கவுன்சிலர் தூய்மை பணி மேற்கொள்ள தெரிவித்தும் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 

பெண் சிசு மண்ணில் புதைத்து கொலை; குடிகார தாயின் கொடூர செயலால் அதிர்ச்சி

இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே களத்தில் இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்களாக காட்சியளித்து சமூக விரோதி கூடாரமாக மாறியுள்ளது.

ஸ்டாலின் அதிகம் பேசினால் அரசாங்கம் கலைந்துவிடும் - எச்.ராஜா எச்சரிக்கை

இதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கபடாததால் இங்கு இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டதோடு மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தற்போது பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ வைராலகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios