கோவையில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
அன்னூர் அருகே உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் குழந்தைகளுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காடுவெட்டி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்ல கவுண்டன்பாளையம் கிராமத்துக்கு 6ம் எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் குறித்த நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பேருந்தின் நேரத்தை அன்னூர் பணிமனை நிர்வாகம் மாற்றி அமைத்தது. இதனால், காலை நேரத்தில் பணி நிமித்தமாக பல பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கடலூரில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதல்; நூற்றுக்கணக்கில் செத்து மடிந்த உயிர்கள்
எனவே, பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க கிராம மக்கள் பணிமனை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள், அரசு அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் அரசு பேருந்தை சிறை பிடித்தனர்.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்
சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு பணிமனை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர். பேருந்து நேரம் மாற்றியமைக்கப்படாத பட்சத்தில் பள்ளி குழந்தைகளுடன் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.