Asianet News TamilAsianet News Tamil

கோவையில் மதுபானம் வாங்குவதற்காக நாட்டியப் பள்ளியில் சாமி சிலைகள் திருடிய இருவர் கைது!!

கோவையில் மதுபானம் வாங்குவதற்காக நாட்டிய பள்ளியில் இருவர் சிலைகளை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Two arrested for stealing God idols from dance school to buy alcohol in Coimbatore
Author
First Published Dec 7, 2022, 11:13 AM IST

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி என்பவர் அதே பகுதியில் நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு வயது 50. இவரது நாட்டிய பள்ளிக்கு கடந்த  சனிக்கிழமை நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த திருட்டு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை குனியமுத்தூர் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும், திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சி.சி.டி.வி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டைப் பையில் சிலைகளை வைத்து எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கிரண் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேரூர் நொய்யல் ஆறு… கார்த்திகை தீபத் திருநாளையொட்டி வழிபாடு!!

Two arrested for stealing God idols from dance school to buy alcohol in Coimbatore

Watch : கோவை அருகே சாலைக் குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு!

விசாரணையில், கூடுதலாக மதுபான பாட்டில்களை வாங்குவதற்காக சாமி சிலைகளை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Two arrested for stealing God idols from dance school to buy alcohol in Coimbatore

Follow Us:
Download App:
  • android
  • ios