Breaking: கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து 3 பேர் உயிரிழப்பு
கோவை கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து மூவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியை அடுத்த தெக்கலூர் அருகே தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது, இரும்பு ஆங்கிள் சரிந்ததில் 3 பேர் உயிரிழந்து இருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விளம்பர பேனர் அமைக்கும் கூலி தொழிலாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது.