தொழிற்பேட்டை அமைக்க வரும் அதிகாரிகளுக்கு ஆப்பு! - 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒன்று திரண்ட விவசாயிகள்!

அன்னூர் பகுதியில் தொழில்பேட்டை அமைக்க வரும் அதிகாரிகளை கண்காணித்து விரட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் அலுவலகம் திறந்துள்ளனர் விவசாயிகள்
 

the officials coming to set up the industrial park! - Farmers gathered in more than 15 villages!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் உள்ள 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

இதற்கு இந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தங்கள் விளைநிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என விவசாயிகள், நமது நிலம் நமதே என்ற போராட்ட குழுவினை அமைத்து விவசாயிகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

தமிழக அரசு அன்னூரில் தொழில்பேட்டை அமைக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தின் வடிவினை மாற்றி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்

விவசாய நிலங்களை கையகப்படுத்த வட்டாட்சியர்கள் பணியமர்த்தபட்டுள்ளதால் நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் வருவார்கள் எனவே அவர்களை தடுக்க நிலம் கையகப்படுத்த உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நமது நிலம் நமதே குழு சார்பில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு அதனை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கபட்டுள்ளது

இன்று இருசக்கர வாகனத்தில் விவசாயிகள் பேரணியாக சென்று கிராமங்களில் துவக்கபட்டுள்ள அலுவலகங்களை திறந்து வைத்தனர்

மேலும் வெளி ஆட்கள் அல்லது புதிய நபர்கள் கிராமங்களில் நுழைந்தால் அவர்களை கண்காணிக்கும் பொருட்டு இந்த அலுவலகம் திறக்கபட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தங்களது விருப்பத்திற்கு மாறாக அரசு செயல்பட்டால் கடுமையான போராட்டங்களை அரசு சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios