பகுதிநேர வாகன ஓட்டியான மாணவனை தாக்கிய ஆட்டோ கும்பல்! - கோவை ஆணையரிடம் சட்டக்கலூரி மாணவர்கள் மனு!
பகுதிநேர வாகன ஓட்டியான சட்டகல்லூரி மாணவரை, அடித்தும் தகாத வார்த்தைகளை பேசிய ஆட்டோ ஓட்டுனர் கும்பல் மீது சட்ட கல்லூரி மாணவர்கள் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ராஜா என்பவர் அரசு சட்டக்கல்லூரியில், எல்.எல்.பி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தற்போது கோவையில் உள்ள வடவடள்ளியில் நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கல்வி பயின்று வருகிறார். அவரது குடும்பத்தின் குழ்நிலை காரணமாகவும், கல்வித் தேவைகளுக்காகவும் மேலும் அவருடைய மருத்துவச் செலவுகளுக்காக பகுதி நேர வேலையாக வாகன ஓட்டியாக பணியாற்றி வருகிறார்
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் வாடிக்கையாளரை பிக்கப் செய்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார், அப்போது அங்கு திரண்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலரும் இங்கெல்லாம் ரேஃபிட்டோ ஒட்டக்கூடாது, ஆட்டோக்காரர்கள் ஓட்டக்கூடிய இடம் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்