Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர் கோப்பை: ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை தட்டி சென்ற கோவை கூலித் தொழிலாளி மகள்!

கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் ரூ.2 லட்சம் பரிசுத்தொகையைனை தட்டிச் சென்றுள்ளார்

Tamilnadu CM trophy coimbatore laborer daughter won two lakhs prize
Author
First Published Jul 23, 2023, 2:12 PM IST

கோவையைச் சேர்ந்தவர்கள் மரியமுத்து ராஜா, ஸ்டெல்லா ஜோஸ்மின் தம்பதியினர். மாரிமுத்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மூத்த மகள் ஏஞ்சல் சில்வியா. கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ வரலாறு பயின்று வருகிறார்.

சிறுவயதில் இருந்து தடகளத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சல் சில்வியா நடைபெற்று முடிந்த முதலமைச்சர் கோப்பைக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். இதில் 100  மீட்டர் பிரிவில் 11.9 விநாடிகளிலும், 200 மீட்டர் பிரிவில் 20.4 விநாடிகளிலும் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

தொடர்ந்து ஏஞ்சல் சில்வியாவுக்கு 2 தங்கப்பதங்களும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. தொடர் முயற்சியால் இந்த வெற்றியை எட்டியுள்ளதாகவும், நாட்டிற்காக அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைப்பேன் என்றும் நம்பிக்கையுன் கூறுகிறார் ஏஞ்சல் சில்வியா..

“தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்” டியூசன் வருவதை நிறுத்தியதால் தனியார் பள்ளி ஆசிரியை அத்துமீறல்?

இதுகுறித்து ஏஞ்சல் சில்வியா கூறியதாவது: “நான் 6 வயதில் இருந்து தடகளப்போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தேன்.  எனது தந்தை பனியன் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 5 முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் தடகளப் பயிற்சி பெற்று வருகிறேன்.

கடந்த 2017-18ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டேன்.  அப்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். அதனைத்தொடர்ந்து இந்தாண்டுதான் முதலமைச்சர் கோப்பக்கான போட்டியில் கலந்து கொண்டேன்.

இதில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ளேன். தமிழக 'ஜெர்சி' அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வகையில் தற்போது தமிழக 'ஜெர்சி' அணிந்து விளையாடியுள்ளேன். அடுத்தது இந்திய 'ஜெர்சி' அணிந்து விளையாட வேண்டும். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios