Asianet News TamilAsianet News Tamil

வானதி சீனிவாசன் பூரண நலம் பெற கோயில்களில் சிறப்பு வழிபாடு!

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பூரண உடல்நலம் பெற வேண்டி கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன

Special worship in temples for Vanathi Srinivasan to get recover from her health issues smp
Author
First Published Nov 5, 2023, 3:52 PM IST | Last Updated Nov 5, 2023, 3:52 PM IST

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தேர்தல் பிரசாரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்று, அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பூரண உடல்நலம் பெற வேண்டி கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

வானதி சீனிவாசனின் உறவினர்கள், ஆதரவாளர்கள், பாஜகவினர், தொண்டர்கள் என பலர் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் வழிபாடு செய்தனர்.

பூஜைகள், ஹோமம்  மற்றும் விளக்கு பூஜை ஆகியவை செய்து அவர் குணமடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. நூற்றுக் கணக்கான பெண்கள் தங்கள் கைகளில் விளக்கு ஏற்றியும் சிறப்பு பூஜைகள் நடத்தி, அவர் விரைவில் உடல்நிலை சீராகி பொது சேவைக்கு வர வேண்டும் என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios