Asianet News TamilAsianet News Tamil

தொடங்கியது ரமலான் நோன்பு.. சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபட போவதாக கோவை ஹிலால் கமிட்டி அறிவிப்பு..

தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவதுடன் சிறப்பு இறை வழிபாட்டில் ஈடுபட போவதாக கோயம்புத்தூர் ஹிலால் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

Ramadan fasting has started.. Coimbatore Hilal Committee announced that it will engage in special worship.. Rya
Author
First Published Mar 12, 2024, 9:07 AM IST

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது வழக்கம்,அதே போல் இந்த ஆண்டும் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு இன்று முதல் கடைப்பிடிப்பதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்திருந்தார்

அதன்படி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜாமஅத் மஸ்ஜிது பள்ளிவாசலில் கோயம்புத்தூர் ஹிலால் கமிட்டியின் ரமலான் பிறை பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பிறை தென்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாகவும்,இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறுவதுடன் சிறப்பு இறை வழிபாட்டில் ஒரு மாத காலத்திற்கு ஈடுபட போவதாக ஹிலால் கமிட்டியில் தலைவர் அப்துர் ரஹீம் இம்தாதி தெரிவித்தார்.

இதனிடையே கோயமுத்தூர் அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக பிறை பார்க்கும் நிகழ்வு தலைவர் ஆசிரியர் அமானுல்லா அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இதில் பேராசிரியர் செயலாளர் பீர் முகமது, முத்துவல்லி ஜாஃபர் அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக்அஹமது, முகமது ஷபிக், முகமது இப்ராஹிம், தலைமை இமாம் இப்ராகிம் பாகவி, மற்றும் மகாசபையாளர்கள் நூறு முகமது, சேட், அரசத், மோதினார்கள் உசேன், அசரப், ஜமாத்தார்கள் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு பிறை பார்க்கும் நிகழ்வு கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பிறை தென்பட்ட காரணத்தினால் செவ்வாய் கிழமை முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ரமலான் நோன் பையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற உள்ளதாக அத்தர் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்..

Follow Us:
Download App:
  • android
  • ios