நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை - அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் தென்னை விவசாயிகள் நலன் கருதி தேங்காய் எண்ணெய்யை நியாய விலை கடைகளில் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம், தாத்தூர், முத்தூர், நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்களில் வேர்வாடல் நோய் தாக்கி விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக முதல்வர் உத்தரவுப்படி இன்று பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேர்வாடல் நோய் தாக்கியுள்ள தோட்டங்களில் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்பட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை துறை வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னை மரங்களில் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், முற்றிலுமாக நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தென்னை மரங்களில் தாக்கியுள்ள இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக வேளாண் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாந்தன் மறைவு; இன்னும் அகதிகள் முகாமில் 3 பேர் இருப்பது தேச நலனுக்கு எதிரானது: திருமாவளவன்
தற்போது தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காத இந்த சூழலில் தேங்காய் எண்ணெய்யை நியாய விலை கடைகளில் வழங்குவது குதித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தேங்காய் எண்ணெய்யை உணவில் சாப்பிடும் பழக்கம் இல்லை. இதை எப்படி வழங்கலாம் என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொப்பரை தேங்காய் 89 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 108 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 111 ரூபாய் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.