Asianet News TamilAsianet News Tamil

இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா? தனியார் பள்ளிக்கு எதிராக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவையில் இலவச கல்வி என்று கூறி மாணவர்களை சேர்த்துக் கொண்டு தற்போது ஆயிரக்கணக்கில் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தனியார் பள்ளிக்கு எதிராக மாணவர்களுடன் பெற்றோர் ஆட்சிர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

private school students and parents protest against school management in coimbatore for over fee vel
Author
First Published Feb 1, 2024, 2:39 PM IST

கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும், இதனைக் கேட்க போனால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இது குறித்து பெற்றோர் அளித்துள்ள மனுவில், ஆரம்பத்தில் பள்ளியில் இலவச கல்வி தருவதாக கூறி உறுதியளித்ததன் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்தோம். அப்போது 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்பட்ட நிலையில் பின்பு 300, 600, 900 என 1800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அதில் குறிபிட்டுள்ளனர். 

வேலூரில் நகை வாங்குவது போல் நடித்து 5 சவரன் வளையல் அபேஸ்; போலீஸ் அதிரடி

மேலும்  2024-25ம் கல்வியாண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை என கூறி குறைந்தபட்சம் 30,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை கல்வி கட்டணம் கேட்பதாகவும் கட்டணத்தைச் செலுத்த இயலாவிட்டால் பள்ளியில் இருந்து TCயை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பள்ளி FCRA வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ள பெற்றோர்கள், இந்த பள்ளியின் கட்டண பில்லில் பள்ளி கட்டணம் 100  ரூபாய் என்று இருக்கும் நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். 

எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும்  மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர் சொர்ணலதாவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால் வரும் தேர்தலில் நாங்களே போட்டியிடுவோம் - கள் இயக்கத்தினர் எச்சரிக்கை

மனு அளிக்க வந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios