Asianet News TamilAsianet News Tamil

கொலை குற்றவாளியை சயின்டிஸ்டாக மாற்றிய கோவை மத்திய சிறை; சிறையில் உருவான இ சைக்கிள்

கோவை மத்திய சிறையில் கொலை குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்துவரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது முயற்சியால் இ சைக்கிள் கண்டுபிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

prisoner designed a electric bicycle in coimbatore central jail
Author
First Published Jun 10, 2023, 8:32 AM IST

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (வயது 31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில்  8 ஆண்டுகளுக்கு முன்  கொலை சம்பவத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

prisoner designed a electric bicycle in coimbatore central jail

ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.

மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டவரின் மகள் பாம்பு கடித்து பலி

இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்ய முடியும். வழக்கமான சைக்கிள் ஆகவும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் இ பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிள்களை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலை குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை  பயன்படுத்தி இதுபோன்று இ பைக், இ-ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முறமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுதலை பெற்றுள்ளது. மேலும் இவர் வடிவமைத்துள்ள இந்த சைக்கிள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios