மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்

கோவையில் நடைபெற்ற தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களை பிற மாணவர்களோடு ஒப்பிடக் கூடாது என பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

parents should not compare your children into other students says minister anbil mahesh

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பாரதியாரின் வாழ்க்கை PSG குழுமம் உண்மையாக்கி கொண்டுள்ளதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

நீதிக் கட்சியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு க ஸ்டாலின் நடத்தி வருகிறார். தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டப் பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது. 1921ம் ஆண்டு தீபாவளியன்று பீளமேடை சேர்ந்துள்ள இந்த பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த பள்ளி. இப்படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும். 

பேருந்து நிலையத்தில் எல்லை மீறிய இளம் ஜோடி; வீடியோ வெளியாகி பரபரப்பு

பீளமேடு பகுதியை ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டியது கல்வி நிலையங்கள் தான். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல மனிதர்களை அளிப்பது எதுவென்று கூறினால் அது எங்கள் பள்ளிக்கல்வித்துறை தான். அகாடமிக் சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் மாணவர்களை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லக்கூடிய பாடங்களையும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன்.

திடீரென எதிர் திசையில் பாய்ந்த சொகுசு கார்; மற்றொரு காருடன் மோதி 5 பேர் படுகாயம் 

மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பிள்ளைகளுடைய தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாக பார்க்கிறேன். மாணவர்கள் நீங்கள், உங்களுடைய பெற்றோர், ஆசிரியர் என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதனை மனதில் வைத்து கொண்டு இந்த வயது படிக்கின்ற வயது என்பதால் படிப்பில், கவனம் செலுத்துங்கள். நம்முடைய ஆசிரியர், பெற்றோர்க்கு பெருமையை தேடி தர வேண்டும் என தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios