Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் பணி நீக்கம் அறிவிப்புக்கு எதிர்ப்பு... கருப்பு பட்டை அணிந்தபடி பணியாற்றிய செவிலியர்கள்!!

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை எதிர்த்து கோவையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணியாற்றினர். 

nurses worked with black bands for showing their support to nurses who protest against dismissal announcement
Author
First Published Jan 5, 2023, 12:23 AM IST

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணி நீக்கத்தை எதிர்த்து கோவையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணியாற்றினர். கொரோனா தொற்றுப் பரவலின்போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3 ஆயிரத்து 200செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அப்போது இருந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் அரசின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து செவிலியர்கள் பணியாற்றி வந்தனர்.

இதையும் படிங்க: அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் கொள்கை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது செவிலியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈவேரா உடலுக்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மு.க.ஸ்டாலின்… விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி வரவேற்பு!!

அதன் ஒரு பகுதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக செவிலியர்களின் பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தபடி  பணி செய்தனர். அந்த வகையில் கோவையிலும் சுமார் 200 எம்.ஆர்.பி.செவிலியர்கள் கருப்பு பட்டையுடன் பணியாற்றினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios