நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி
கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு, வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக எம்.பி. கனிமொழி தொலைபேசி வாயிலாக உறுதி அளித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர். கடந்த வாரம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று (23/06/2023) காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து எம்.பி. கனிமொழியின் பயணத்தின் போது ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும், பணியில் இருந்த பயிற்சி நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷர்மிளா பேருந்தின் உரிமையாளரிடம் புகார் அளிக்கச் சென்ற நிலையில், அவரை பணி நீக்கம் செய்துவிட்டதாக ஷர்மிளாவும் அவரது தந்தையும் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பேருந்தின் உரிமையாளர், நான் ஷர்மிளாவை நீக்கம் செய்யவில்லை.
பிரபலங்களால் வேலையை இழந்த ஷர்மிளா; கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணி நீக்கம்
ஷர்மிளா தான் இனி நான் வேலைக்கு வரமாட்டேன் என்று கூறினார். அதற்கு நான் பதில் அளிக்கவில்லை. அவர் விருப்பப்படும் பட்சத்தில் மீண்டும் வேலைக்கு வரலாம். அவர் மீத எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது என்றார். இந்நிலையில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் அறிந்த எம்.பி கனிமொழி பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
ஜூலை 15ல் மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு