விபத்தில் மகன் இறந்த துக்கம்; விஷம் குடித்ததில் தாய் பலி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த தந்தையும் உயிரிழப்பு!

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (46). மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர்தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார். 

Mourning son death in an accident.. poisoned couple death

சாலை விபத்தில் மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இதில், மனைவி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (46). மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர்தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. 

இதையும் படிங்க;- சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. குடித்துவிட்டு ஓட்டினாலும் ஆப்பு தான்..!

இதில், ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். மகன் இறந்ததால் ரவி கிருஷ்ணாவின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து துக்கத்தில் காணப்பட்டனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று வீட்டில் இருந்த கணவன் -மனைவி இருவரும் பூச்சி மருந்தை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றார். 

அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் விஷம் குடித்து மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நந்தினி உயிர் இழந்தார். ஐசியூவில் சஞ்சீவ் சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 20 பேர் படுகாயம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios