Asianet News TamilAsianet News Tamil

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் முத்துசாமி

கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் வேறு வழியின்றி மதுவை குடிக்கின்றனர். காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

minister muthusamy explain alcoholics in coimbatore
Author
First Published Jul 17, 2023, 2:36 PM IST

வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி கோவையில் 17.45 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதன் ஒரு பகுதியாக ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் முத்துசாமி கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கிமீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் சைக்கிள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மிக விரைவில் சைக்கிள் வழங்கப்படும் என்றார். 

சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தாளாருக்கு போலீஸ் வலைவீச்சு

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை. இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விடப்போவதில்லை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது. அமலாக்கத்துறை சோதனைகளால் பயத்தையும் ஏற்படுத்தி விட முடியாது, எங்களது கவனத்தையும் திருப்ப முடியாது. பெங்களூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் எதிர்கட்சி கூட்டம் சிறப்பாக நடக்கும்.

கோவை மத்திய சிறைச்சாலை இடம் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் சொல்லவில்லை. டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சினை தீர்ந்தால் தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்க்கும் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை - புதுச்சேரி இடையே நீராவி என்ஜின் வடிவ சுற்றுலா ரெயிலின் சோதனை ஓட்டம்

மது பாட்டில்களால் பல்வேறு பிரச்சனைகள் வருவதால்,  டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னோம். ஆலோசணைகளை அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்வோம். அதற்கு ஏன் திட்டுகிறார்கள்? மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது, அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, கருத்துகள் கேட்டே கொண்டு வரப்படும்.
 
டெட்ரா பேக், 90 மிலி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவை வந்தாலும் வரலாம், வரமாலும் போகலாம். காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது. கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். இதனைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளை சொல்லுங்கள். டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை. சட்ட விரோதமாக மது வாங்கி தவறு நடந்து விட கூடாது. மதுக்கடையில் காத்திருப்பதை தவிர்க்க 90 மி.லி. மது கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது. மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios