ஏரி, குளங்களை சரிசெய்துகொள்ளுங்கள்; நகரம் தாங்காது - கோவைக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கோவையில் ஏரி, குளங்களை தூர்வாரி முறையாக பராமரியுங்கள் ஒரே நாளில் 10 செ.மீ. மழை பெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் அதிகபட்சமாக 96 செ.மீ. அளவில் மழை பெய்து ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பிக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே இதுபோன்ற திடீர் மழைபொழிவு இனிவரும் காலங்களில் தொடர்கதையாக இருக்கலாம். குறிப்பாக சென்னை, கோவை போன்ற நகரங்கள் இதுபோன்ற மழைபொழிவை சந்தித்தால் அந்த நகரங்கள் தாங்காது என்றும் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தில் அரசின் விதிமீறல் அம்பலமாகியுள்ளது - அன்புமணி ஆவேசம்
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 செ.மீ. வரை மழை பெய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுபோன்ற நிலையை சந்தித்தால் நகரம் தாங்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கோவையின் மேற்குதொடர்ச்சி மலைக்கு அப்பால் வான்வழியாக 60 கி.மீ. தொலைவில் தான் அரபிக்கடல் உள்ளது. அரபிக்கடலில் உருவாகும் தாழ்வழுத்த மண்டலம், காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியின் காரணமாக உருவாகும் ஈரக்காற்று, உயரமான மலைமுகடுகளில் மோதி மீண்டும் அரபிக்கடலுக்கே திரும்பும். அப்படி நிகழும் பொழுது அதிப்படியான மழைப்பொழிவு இருக்கும்.
இதன் தாக்கம் கோவையிலும் எதிரொலிக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 செ.மீ. வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.