இனமென பிரிந்தது போதும்.! மூன்று மத குருமார்கள் முன்னிலையில் திருமணம் நடத்தும் டி.எஸ்.பி.! அடேங்கப்பா !!

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் கோவை டி.எஸ்.பி. இந்த திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Marriage in front of tri-faith priests: Coimbatore DSP daughter's wedding invitation goes viral

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருபவர் வெற்றிச்செல்வன். முன்னதாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்னைகளைக் கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றிவந்தார்.

காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தபோது மதம் சார்ந்த பிரச்னைகளைச் சிறப்பாகக் கையாண்டு, பிரச்னைகளுக்குச் சுமுகமாகத் தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்துள்ளார். கலவரங்கள் ஏற்படும் சூழலில் துரிதமாக செயல்பட்டு அவற்றை கட்டுப்படுத்தியதற்காகவும், தடுத்து நிறுத்தியதற்காகவும் குடியரசுத் தலைவர் விருது மற்றும் அண்ணா விருது பெற்றுள்ளார்.

Marriage in front of tri-faith priests: Coimbatore DSP daughter's wedding invitation goes viral

இந்தநிலையில் முனைவர் பட்டபடிப்பு படித்து வரும் இவரது மகள் நிஷாந்தினிக்கும், திருநெல்வேலியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை மும்மதங்களை சேர்ந்த மதகுருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்துள்ளார் வெற்றிச்செல்வன்.

அதன்படி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் ராமானந்த குமரகுருபரசுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், போத்தனூர் மஜ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் இமாம் அப்துல் ரஹீம் இம்தாதிபாகவி ஆகியோர் பெயர்களை தனது மகளின் திருமண அழைப்பிதழில் இடம் பெற வைத்துள்ளார்.

இதையும் படிங்க..பிரதமர் மோடியின் கைகளில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் செங்கோல்.. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ட்விஸ்ட்

Marriage in front of tri-faith priests: Coimbatore DSP daughter's wedding invitation goes viral

மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் திருமண பத்திரிக்கையில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் திருமண பத்திரிக்கையில், "உடம்பொடு உயிரிடை என்னமற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு." என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பத்திரிக்கை சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.

காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மதங்களை கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற வெற்றிச்செல்வனின் நோக்கத்துக்கு நாலா புறமும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க..யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் - யார் யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios