Asianet News TamilAsianet News Tamil

வீட்டு பூந்தொட்டியில் இருந்து படமெடுத்து ஆடிய நாக பாம்பு; உரிமையாளர் ஷாக்

கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் வெப்பம் தாங்காமல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியில் படுத்துறங்கிய நாக பாம்பை பாம்புபிடி வீரர் லாவகமாக பிடித்து புதர் பகுதியில் விட்டார்.

man rescued snake from residence in coimbatore
Author
First Published Apr 18, 2023, 9:38 AM IST | Last Updated Jul 3, 2024, 5:09 PM IST

கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூ தொட்டிக்குள் நாகபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் கிரீன்கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் அந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பிடிப்பட்ட அந்த பாம்பு சுமார் நான்கரை அடி நீளம் இருந்துள்ளது. இதனை பார்த்து அவ்வீட்டார் உட்பட அக்கம்பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

பின்னர் பிடிப்பட்ட பாம்பு பெரியகுளம் மேற்கு கரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது. கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் பாம்புகள் உட்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் தொடர்ந்து குளிர்ச்சியான இடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது அதிகரிக்க துவங்கி உள்ளது. 

மனைவியை மதம் மாற்ற முயற்சி; சீருடையுடன் வந்து புகாரளித்த ராணுவ அதிகாரியால் பரபரப்பு

இப்பகுதியிலேயே கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் மாலை நேரங்களில் விளையாடி கொண்டிருப்பதாலும், விரைவில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் குழந்தைகள் அனைவரும் அதிக நேரம் அப்பகுதியில் விளையாடுவர் என்பதால் குடியிருப்பு பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios