கோவையில் மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண்; மடக்கி பிடித்த பொதுமக்கள்

கோவையில் மது போதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண்ணை பொதுமக்கள் சினிமா பாணியில் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

lady drunk and driver arrested by coimbatore police

கோவை மாவட்டம் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனை அருகே நான்கு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த பெண் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து நஞ்சுண்டாபுரம் சாலையில்  சென்ற போது  அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரிடம்  விசாரணை நடத்தியதில் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்பதும், அவர்  மது போதையில் இருந்ததாகவும், பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் வழக்கறிஞருக்கு இரண்டாம் ஆண்டு பயின்று வருவதாகவும் தெரியவந்தது.

10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் 2 மாத குழந்தையை கடத்திச் சென்ற பெண் உள்பட 2 பேர் கைது

மேலும் வாகனத்தை விட்டு இறங்காமல் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு  மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

டிஐஜி விஜயகுமார்.. உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் - 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios