AIADMK: அதிமுக ஒன்றும் உங்க அப்பா வீட்டு சொத்து இல்ல; எடப்பாடிக்கு, கே.சி பழனிசாமி அட்வைஸ்
எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அ.தி.மு.க தொண்டர்களின் சொத்து என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கில் விசாரணைக்காக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி இன்று கோவை நீதிமன்றம் வந்தார். வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்றத்திற்கு வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 13ம் தேதி என் மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதன் அடிப்படையில் அவர்மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
* கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை 2014-ல் திரு சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் வாங்கிய வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்று கூறி திரு.எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி அடைகிறார்.
— K C Palanisamy (@KCPalanisamy1) July 6, 2024
* அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் @EPSTamilNadu , அந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில்… pic.twitter.com/Uu9glhYDHN
அ.தி.மு.க.வின் வாக்குகள் தி.மு.க.விற்கு சென்றிருக்கிறது. கோவையிலும் வாக்கு சதவீதமும் குறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க நினைக்கும் ஒவ்வொருவரையும் அரவணைப்பது தான் நல்லது. உடல்நிலை கருதி தான் ஜானகி அம்மா ஒதுங்கிக் கொண்டார். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்தார். அதை ஜெயலிதா ஏற்றுக்கொண்டார்.
லைக்குக்காக அந்த மாதிரி வீடியோ எடுத்தது தப்பு தான்; போதை இளைஞர்களை வைத்து போலீஸ் தரமான சம்பவம்
எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கிளைச்செயலாளர் அளவிலேயே செயல்படுகிறார். யாரையும் அரைவணைக்கும் எண்ணம் அவருக்கு இல்லை. எடப்பாடி பேசுவது எல்லாம் அரசியல் அறியாமையில் பேசுகிறார். ஒருங்கிணைப்பு குழு சார்பாக முதல்கட்டமாக சசிகலாவை சந்திக்க இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு கட்சி அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அ.தி.மு.க தொண்டர்களின் சொத்து. அ.தி.மு.க தலைமைக்கு தகுதியற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.