Asianet News TamilAsianet News Tamil

Jothimani: கோவை தொகுதியை அதிமுகவும், வேலுமணியும் அண்ணாமலைக்கு விட்டு கொடுத்துள்ளனர் - ஜோதிமணி பரபரப்பு தகவல்

அதிமுக, பாஜக இடையேயான வார்த்தைப் போர் என்பது நாடகம். கோவை தொகுதியை பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுகவும், வேலுமணியும் அண்ணாமலைக்கு விட்டு கொடுத்துள்ளனர் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

karur mp jothimani slams bjp government in chennai airport vel
Author
First Published Jun 7, 2024, 7:48 PM IST | Last Updated Jun 7, 2024, 7:48 PM IST

சென்னை விமான நிலையத்தில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் பா.ஜ.க.வும், மோடியும் ஆட்சி அமைக்க கூடாது என்று மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உரிமை கோர கூடாது.

யூடியூப் மட்டும் பார்த்து படித்து நீட் தேர்வில் 687 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாணவன்; பெற்றோர் மகிழ்ச்சி

மக்கள் எதிர்த்து ஒட்டு போட்டு உள்ளதால் தார்மீக அடிப்படையில் பதவி ஏற்க கூடாது. இது பா.ஜ.க ஆட்சி இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று கூறுகின்றனர். அமைச்சரவையில் இடம் கேட்டு நிர்பந்தங்கள் இருப்பதாக தகவல்கள் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் நம்பிக்கையை பெற்று உள்ளோம். 

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு

சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். அதிமுக - பா.ஜ.க. வார்த்தை போர் என்பது நாடகம். பா.ஜ.க அழுத்தம் காரணமாக அதிமுகவும், வேலுமணியும், அண்ணாமலைக்கு விட்டு கொடுத்து உள்ளனர். இதை மறைத்து அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வேலுமணியும், அண்ணாமலையும் நாடகம் நடத்துகின்றனர். பா.ஜ.க.விற்கு கிடைத்த வாக்கு வங்கி அதிமுகவின் வாக்கு தான் என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios