Asianet News TamilAsianet News Tamil

யூடியூப் மட்டும் பார்த்து படித்து நீட் தேர்வில் 687 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாணவன்; பெற்றோர் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் யூடியூப் மட்டும் பார்த்து படித்து நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் எடுத்து மாணவன் சாதனை படைத்துள்ளார்.

A student in Tirupur scored 687 marks in NEET by only watching YouTube and studying vel
Author
First Published Jun 7, 2024, 1:04 PM IST

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் குள்ளம்பாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துக் கொண்டே இணையதளம் மூலமாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று முதல் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவன் சஞ்சய்.

இது தொடர்பாக மாணவர் சஞ்சய் கூறியதாவது, நான் காங்கேயத்தில் வசித்து வருகின்றேன். எனது பெற்றோர்கள் ரமேஷ் மற்றும் காஞ்சனா. தந்தை ரமேஷ் சொந்தமாக அரசி கடை வைத்து  நடத்திவருகிறார். நான் ஊதியூர் அருகே குள்ளம் பாளையத்தில் உள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும் கல்வி பயின்றேன். 

மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு

எனக்கு  மருத்துவ படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதனால் மேல்நிலைப் பள்ளி படிப்பின் போதே எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் எனது சொந்த முயற்சியில் இணையதளம் மூலமாக யூடியூபில் நீட் தேர்வு தொடர்பான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று முதல் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன். 

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; காங். பிரமுகர் மரண வழக்கில் விழி பிதுங்கும் சிபிசிஐடி போலீஸ்

மேலும் இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் சிறந்த ஊக்கம் கொடுத்தனர். எனவே என்னால் இந்த வெற்றியை பெற முடிந்தது. மேலும் இந்த முறை இந்திய அளவில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், நான் முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன். இனி வருபவர்களும் விடாமுயற்சியாக படித்து வெற்றிபெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios