Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டி! மநீம துணைத் தலைவர் தங்கவேலு பேட்டி

கமல் எம்பி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுகிறார், அது கோவையாகவும் இருக்கலாம் என தங்கவேலு கூறியுள்ளார்.

Kamal Haasan will contest in parliamentary elections! says MNM Vice President Thangavelu
Author
First Published Jul 23, 2023, 5:35 PM IST | Last Updated Jul 24, 2023, 9:13 AM IST

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி அனைத்து கட்சியினரும் அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். கூட்டணி குறித்தான ஆலோசனைகளும் கட்சிகளுக்குள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களோடு மய்யம்" என்ற நிகழ்வை முன்னெடுத்துள்ளனர். இதில் அக்கட்சியினர் நேரடியாக மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து அடிப்படை குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து அதனை வாக்குறுதியாக அளிக்க உள்ளனர். இது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

ட்விட்டர் பெயர், லோகோவை மாற்ற திட்டம்! பறவைக்கு குட்பை சொல்லும் எலான் மஸ்க்!

Kamal Haasan will contest in parliamentary elections! says MNM Vice President Thangavelu

அதன்படி மக்களோடு மய்யம் நிகழ்வை கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இன்று முதல் துவங்கி உள்ளனர். இதன் முதல் துவக்க நிகழ்வு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் துவங்கி உள்ளது. முதல் நாள் நிகழ்வு புலியகுளம் பெரியார் நகரில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு,  கொள்கை பரப்பு செயலாளர் அர்ஜுன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்து குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர்.  இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு, மக்களோடு மய்யம் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் எம்பி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுகிறார், அது கோவையாகவும் இருக்கலாம் மற்ற இடங்களாகவும் இருக்கலாம். அவர் விருப்பப்பட்டால் இங்கு நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் அடிப்படை குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் வாரம் தோறும் மனுக்களாக அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய ராணுவ அதிகாரியின் AI கண்டுபிடிப்புக்கு காப்புரிமை! ராணுவ வாகனங்களில் பொருத்த ஏற்பாடு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios