Asianet News TamilAsianet News Tamil

தமிழை எப்படியாவது காப்பாத்துங்க..! அறிவுரை கூறும் ஜக்கி வாசுதேவ்..!

தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மண்ணை நாம் இந்த தலைமுறையில் காப்பாற்றாவிட்டால், அது இல்லாமல் போய்விடும். ஒரு கலாச்சாரத்தில் ஒரு தலைமுறைக்கு தெம்பும் பெருமையும் வேண்டுமென்றால் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும். 

Jakki Vasudev's wish for pongal
Author
Tamil Nadu, First Published Jan 14, 2020, 12:55 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று முதல் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் கலாச்சாரத்தை இளைஞர்கள் காப்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். 

Jakki Vasudev's wish for pongal

அவரது வாழ்த்துச் செய்தியில், 'அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் விழா என்பது உழவர் திருநாள். நம்முடைய தமிழ் கலாச்சாரமானது, மண்ணுடன் கலந்து  செயல் செய்து உணவு தயாரித்து முழுமையாக வாழும் கலாச்சாரம். இதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. குறிப்பாக, நகரங்களில் இருப்பவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். மாட்டு பொங்கல் அன்று சினிமா தியேட்டருக்கோ, ரெஸ்டாரண்டுக்கோ செல்வதற்கு பதிலாக, உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதாவது கிராமத்துக்கு சென்று கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுங்கள். குறிப்பாக, இளைஞர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். கிராமங்களுக்கு செல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியையாவது உடுத்தி கொள்ளுங்கள்.

Jakki Vasudev's wish for pongal

தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மண்ணை நாம் இந்த தலைமுறையில் காப்பாற்றாவிட்டால், அது இல்லாமல் போய்விடும். ஒரு கலாச்சாரத்தில் ஒரு தலைமுறைக்கு தெம்பும் பெருமையும் வேண்டுமென்றால் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும். உழவர் திருநாளான இந்த பொங்கல் திருநாளில் உழவர்களுடன் ஏதோவது ஒரு வகையில் நீங்கள் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தில் மாட்டு பொங்கல் அன்று கோவை ஈஷா யோகா மையத்தில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதில் நம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடக்க உள்ளது. இதை நீங்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இந்த புது வருடம் ஆரோக்கியமான அன்பான, எல்லாவற்றுக்கும் முக்கியமாக வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அருள்'. இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

Also Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios