ஈஷாவில் இருளர் பழங்குடி மக்களின் இசை நிகழ்ச்சி..! ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டியது

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி மார்ச் 8ம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.
 

irular people music concerts in isha as a part of maha shivratri celebration

ஈஷாவில் இருளர் இன மக்களின் இசை நிகழ்ச்சி:

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி மார்ச் 8ம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படிங்க - IPL 2022: ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஆஃப்கான் அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

ஆதியோகி முன்பு நடந்த இந்த கலை நிகழ்ச்சியில் தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, முள்ளாங்காடு, வெள்ளப்பதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர். தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அரங்கை அதிர செய்தனர்.

இதையும் படிங்க - IPL 2022: விராட் கோலி அவ்வளவுதான்.. இனிமேல் சான்ஸே இல்ல..! முன்னாள் ஆர்சிபி கேப்டன் அதிரடி

பல்வேறு மாநில மக்கள் ரசிப்பு:

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவிற்கு வந்திருந்த மக்கள் நம் பழங்குடி மக்களின் இசையை மெய்மறந்து ரசித்தனர். முன்னதாக, ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ஆதியோகி திவ்ய தரிசனம் முடிந்த பிறகு மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மார்ச் 5-ம் தேதி தொடங்கிய 4 நாள் நாட்டுப்புற கலை திருவிழா நேற்றுடன் (மார்ச் 8) நிறைவுபெற்றது. மார்ச் 5-ம் தேதி கரகாட்டம் மற்றும் காவடியாட்டமும், 6-ம் தேதி கட்டைக்கூத்தும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios