கோவை குற்றாலம் நுழைவு கட்டணத்தில் முறைகேடு - வன அதிகாரி பணியிடை நீக்கம்

கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணத்தில் முறைகேடு செய்த வன அதிகாரி ராஜேஷ்குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Irregularity in Coimbatore entrance fee Forest officer sacked

கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. 

மேலும் முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன் கடந்த 2021 ல் இருந்து போலி சீட்டுகளை வழங்கி பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார், மேலும் அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios