நேரம் தவறாத டாப் 20 விமான நிலையங்களில் இடம்பிடித்த கோவை
உலக அளவில் நேரம் தவறாமல் செயல்படும் 20 சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக கோவை விமான நிலையமும் இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆய்வைச் செய்யும் ஓ.ஏ.ஜி. (OAG) என்ற நிறுவனம் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் 20 விமான நிலையங்கள் ஒன்றாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை விமான நிலையமும் இடம்பெற்றுள்ளது. 13வது இடத்தைப் பிடித்துள்ள கோவை விமான நிலையம்தான் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய விமான நிலையம் என்பதும் கவனிக்கத்தக்கது.
கோவை விமான நிலையம் 88.01 சதவீதம் நேரம் தவறாமல் இயங்குவதுடன் ரத்தாகும் பயணங்கள் 0.54 சதவீதம் மட்டுமே.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருப்பது ஜப்பான் நாட்டின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் ஆகும்.
Johnson & Johnson: ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை நீக்கம்
குறித்த நேரத்தில் தவறாது விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 'இண்டிகோ' நிறுவனம் இடம் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இப்பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. வேறு எந்த இந்திய விமான நிறுவனத்துக்கும் இந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.
2019ஆம் ஆண்டு இண்டிகோ நிறுவனம் 54வது இடத்தைப் பிடித்தபோது அந்நிறுவனத்தின் விமானங்கள் 77.38 சதவீதம் நேரம் தவறாமல் இயங்கியிருந்தன. இப்போது கடந்த 2022ஆம் ஆண்டில் இண்டிகோ விமானங்கள் 83.51 சதவீதம் நேரம் தவறியது இல்லை. இதனால்தான் பல படிகள் முன்னேறி 15வது இடத்தை எட்டியிருக்கிறது. நேரம் தவறாத 20 விமான நிறுவனங்களுக்குள் குறைவான விலை அடிப்படையில் இண்டிகோ 6வது இடத்தைப் பெறுகிறது.
அமைச்சரின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி! அயோத்தி மடாதிபதி அறிவிப்பு
இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதல் இடத்தை அடைந்திருக்கிறது.