அமைச்சரின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி! அயோத்தி மடாதிபதி அறிவிப்பு
பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகரின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி வெகுமதி அளிப்பதாக அயோத்தி மடாதிபதி ஜகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகர் அண்மையில் ராமாயணக் கதையைக் கூறும் ‘ராமசரிதமானஸ்’ என்ற நூலைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக அவரை உடனடியாகப் பதிவியிருந்து நீக்க வேண்டும் என மடாதிபதிகள் வலியுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து அயோத்தி மடாதிபதி ஜகத்குரு பரமன்ஸ் ஆச்சார்யா கூறுகையில், “அவர் உடனடியாக அமைச்சர் பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும். மன்னிப்பும் கேட்க வேண்டும். இது நடக்காவிட்டால் அவரது நாக்கை அறுப்பவருக்கு ரூ.10 கோடி சன்மானத்தை அறிவிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
ராமசரிதமானஸ் வெறுப்பைத் தூண்டுபவை அல்ல, மக்களை ஒருங்கிணைப்பது என்று குறிப்பிட்ட அவர், “ராமசரிதமானஸ் மனிதநேயத்தை நிலைநிறுத்துவது. அது இந்திய கலாசாரத்தின் உருவமாக உள்ளது. நாட்டின் பெருமிதமாக விளங்குவது. இதுபோன்ற கருத்துகளைச் சகித்துக்கொள்ள முடியாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
போபால் விஷவாயு கசிவுக்கு கூடுதல் இழப்பீடு கேட்பது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி
அண்மையில், நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 15வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் சந்திரசேகர், “மனுஸ்மிருதி, ராமசரிதமானஸ், குரு கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து ஆகிய நூல்கள் வெறுப்பைத் பரப்புபவை. அன்புதான் நாட்டை சிறக்கச் செய்யும், வெறுப்பு அல்ல.” என்று பேசினார்.
மேலும், மனுஸ்மிருதியில் பல பகுதிகள் இழிவுபடுத்தும் வகையில் உள்ளன என்ற அவர், “ராமசரிதமாஸ், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்கக் கூடாது. அவர்கள் பாலைக் குடித்துவிட்டு விஷயத்தைக் கக்கும் பாம்புகள் போன்றவர்கள் என்கிறது.” எனவும் தெரிவித்தார்.
World's longest river cruise: கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!