Asianet News TamilAsianet News Tamil

கொலை களமாக மாறும் கோவை நீதிமன்றம்; பாதுகாப்பை பலப்படுத்திய காவல் துறை

கோவை நீதிமன்ற வளாகத்தில்  குடும்பத்தகராறு காரணமாக  மனைவி மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.

Increased security in Coimbatore court campus
Author
First Published Mar 24, 2023, 12:22 PM IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கவிதா மீது சிவக்குமார் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் அப்பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வழக்கறிஞர் ஒருவரும் ஆசிட் வீச்சில் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார். கோவை நீதிமன்றத்திற்கு ஆறு வழிகள் உள்ளன. தினசரி வழக்கறிஞர் மட்டுமே 1500க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள். கடந்த மாதம் நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கோகுல் கொலையைத் தொடர்ந்து உடனடியாக 6 வழிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் நீதிமன்றம் வரும் யாரையும் சோதனை செய்வதில்லை. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், வழக்கறிஞர்களை தவிர நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி அதன் பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். கைதிகளை காவல் துறை நீதிமன்றம் அழைத்து வந்து அதற்கு காவல் நீடிப்பு வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க உறவினர்கள் வருவதால் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுகிறது.

கோவையில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் தர மறுத்து கடையை சூறையாடிய இளைஞர்களால் பரபரப்பு

இதனால் தற்பொழுது  நீதிமன்றத்திற்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்பொழுது நீதிமன்ற வாயிலில் காவல்துறையினர் வரக்கூடிய நபர்களின் பை மற்றும் உடைமைகளை சோதனை செய்யத பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாலியல் பாதிரியார் பெனடிக்கு பாதுகாப்பில்லை; குமரியில் இருந்து பாளை சிறைக்கு மாற்றம்

Follow Us:
Download App:
  • android
  • ios