தமிழிசை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு மறுப்பு? ஆளுநர் விளக்கம்

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
 

governor tamilisai soundararajan participate coimbatore university function

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிவடையும் வரை தமிழ் தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 

நிகழ்ச்சியின் போது மாணவிகள் மத்தியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசும் பொழுது, 'கல்வியில் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணமாக கழிப்பறை இல்லாதது ஆய்வில் தெரியவந்தது. பிரதமர் மோடி அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் தோறும் கழிவறைகள் கட்டப்பட்டது. இதனால் பெண்கள் கல்வியை கைவிடும் சதவிகிதம் குறைந்துள்ளது.

பெண்கள் பள்ளிக்கு வந்து சுகாதாரமான முறையில் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை நாம் சரி செய்ய வேண்டும். தற்போது கல்லூரி படிப்புகளுக்கு ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்கின்றனர். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை பொருத்தவரை தொழில் சார்ந்த படிப்புகளை தவிர்த்து விட்டு கலை மற்றும் அறிவியல் துறைகளை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இது பிற்காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கைக்கு உதவும் என நம்புகின்றனர். எனவே ஆராய்ச்சி மற்றும் தொழிற்சார்ந்த துறைகளையும் பெண்கள் தேர்வு செய்து முன்னேற வேண்டும்' என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்..
எல்லா இடத்திலும் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். செமினார் என்பதால் பாடவில்லை என நினைக்கிறேன். உள் நோக்கத்துடன் நடைபெறவில்லை. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருக்க வேண்டும். அதை நான் கேட்டேன். அதற்குள் ஆரம்பித்து விட்டார்கள். அதனால் விட்டு விட்டேன்.
வன்முறையை இல்லாத அமைதியான சூழல் நிலவ வேண்டும். தமிழகத்தில் கலாசாரத்தை மாற்றும் சூழல் நிலவுகிறது. தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை என்ற விவாதம் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் கோவில் அதிகம் உள்ளது. அடையாளங்களை மாற்றி செய்யக் கூடாது. அது மோதலை தான் உருவாக்கும். கருத்துரிமை எல்லோருக்கும் உள்ளது. பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும். நானும் சுடிதார் அணிகிறேன். ஆடைகளை குறைப்பது தான் அறிவாற்றல் என்றில்லை. அறிவை வளர்த்துக் கொள்வது அறிவாற்றல். மாடனாக இருக்கலாம் வெஸ்டனாக இருக்க வேண்டாம். வெஸ்டர்ன் ஆடைகளை அணிவது எதிரானது.

அரசியல் அமைப்பு தேசியவாத அமைப்பு. புதுச்சேரியில் பேரணி நடத்தினார்கள் அமைதியாக. அதற்கு எதிராக மனித சங்கிலி கேட்டார்கள் அதுவும் நடந்தது. கேரளாவிலும் அமைதியாக நடந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி நடைபெறுகிறது என தெரியவில்லை.

எனது தந்தையை தெலங்கானாவில் வைத்திருந்தேன். ஆனால் அவர் என்னிடம் சொல்லாமல் தமிழகம் வந்துவிட்டார். 90 வயது மனிதரை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும். தெலங்கானாவில் தெலுங்கு கேட்க முடியவில்லை என வந்துவிட்டார். சுதந்திரமாக இருக்க சென்று விட்டார். கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கையில்லை. பெயரை வைத்து பார்ப்பது என்றால் முதல்வரையே தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்ல முடியும். நான் மட்டும்தான் தமிழ் நாடு என நகைச்சுவையாக தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios