Asianet News TamilAsianet News Tamil

கோவையில் ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரிப்பு.. குண்டுகட்டமாக தூக்கிய போலீஸ்..!

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றம் நேற்றைய தினம்  கூடியது. இதில் ஆளுநரின் மாண்பை மீறியதாகவும் தொடர்ந்து தமிழக அரசிற்கு  எதிராக செயல்படுவதாகவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். தமிழ்நாடு என்ற சொல்லை மாட்டேன் என்ற பேச்சை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

Governer rn ravi portrait burnt in coimbatore
Author
First Published Jan 10, 2023, 3:43 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிட  கழகம் அலுவலகத்தில் முன்பு அத்துமீறி ஆளுநர் ரவியின் உருவ பொம்மை எரித்த  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். 

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றம் நேற்றைய தினம்  கூடியது. இதில் ஆளுநரின் மாண்பை மீறியதாகவும் தொடர்ந்து தமிழக அரசிற்கு  எதிராக செயல்படுவதாகவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். தமிழ்நாடு என்ற சொல்லை மாட்டேன் என்ற பேச்சை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

Governer rn ravi portrait burnt in coimbatore

மேலும், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராக தமிழ்நாடு ஆளுநர் RN. ரவி பேசி வருவதாக கூறி  இந்த உருவபொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  போராட்டக்காரர்களிடம் இருந்து பொம்மையை போலீசார் பறித்து சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பொம்மையை போலீசாரிடம் இருந்து பறித்து எரித்தனர். இதனையடுத்து,  20க்கும் மேற்பட்ட திராவிட கழகத்தினர் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்து சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Governer rn ravi portrait burnt in coimbatore

இதேபோல மற்றொருபுறம் 100 மீட்டர் இடைவெளியில் சாலையை மறித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையை எரித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக நிர்வாகிகளான கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் தொண்டர்கள் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios