Coimbatore Corporation: கோவையில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்த பிப்ரவரி 22, 23 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஒவ்வொரு வார்டுக்கும் குறிப்பிட்ட இடங்களில் முகாம் நடைபெறும்.

கோவையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு பயனுள்ள அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அரசுக்கு வரிகளைச் செலுத்த இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இன்றும் நாளையும் (பிப்ரவரி 22, 23) பல இடங்களில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி வசூல் மூலம் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. சொத்து வரி 6 மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. குடிநீர் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது.

2024-25 நிதியாண்டின் 2ஆம் அரையாண்டில் மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வரிகளை செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி, பிப்ரவரி 22, 23ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் செயல்படும்.

கோவையில் வரிவசூல் முகாம் நடைபெறும் இடங்கள்:

வார்டு எண் 5: டவுன் & சிட்டி அப்பார்ட்மெண்ட், வளியாம் பாளையம்

வார்டு எண் 6: திருமுருகன் நகர் விநாயகர் கோவில் வீரியம்பாளையம் ரோடு

வார்டு எண் 51: ஆர்.ஆர் தர்ஷன் அப்பார்ட்மென்ட்

வார்டு எண் 56: சுங்கம் மைதானம். ஒண்டிப்புதூர்

வார்டு எண் 57 & 58: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, நெசவாளர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பொங்காளியூர், வீரகேரளத்திலம் (சனிக்கிழமை மட்டும்).

வார்டு எண் 33: மூவர் நகர் நூலகம், கவுண்டம் பாளையத்திலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)

வார்டு எண் 75: மாரியம்மன் கோவில் மைதானம், சீரநாயக்கன்பாளையம்

வார்டு எண் 16: லூனா நகர், டி.வி.எஸ் நகர், சரவணா நகர்

வார்டு எண் 15: அங்கன்வாடி மையம், சுப்பிரமணியம் பாளையம்

வார்டு எண் 19: அம்மா உணவகம். மணியகாரம்பாளையம்

வார்டு எண் 25: அரசு உயர் நிலை பள்ளி, அரசு உயர் நிலை பள்ளி, காந்திமாநகர்

வார்டு எண் 28: சுகாதார ஆய்வாளர் அலுவலகம், காமதேனு நகர்

வார்டு எண் 11: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகர்

வார்டு எண் 87: சுகாதார ஆய்வாளர் அலுவலகம், குனியமுத்தூர்

வார்டு எண் 89: சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சுண்டாக்காமுத்தூர்

வார்டு எண் 88: மாநகராட்சி பள்ளி, ரைஸ் மில் ரோடு, குனியமுத்தூர் (சனிக்கிழமை மட்டும்)

வார்டு எண் 97: ஹவுசிங் யூனிட் பேஸ்-2, பிள்ளையார்புரம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்)

வார்டு எண் 32: சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூர்

வார்டு எண் 63: பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்ஷன் சென்டர்

வார்டு எண் 80: ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனி

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.