Asianet News TamilAsianet News Tamil

கோவை அருகே மளிகை கடையை சேதப்படுத்திய ரகளையில் ஈடுபட்ட காட்டு யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் இருந்த மளிகைகளையை சேதப்படுத்தில் அதில் இருந்த பொருட்களை ருசித்து உட்கொண்டது.

gang of forest elephants entered residential area in coimbatore
Author
First Published Apr 27, 2023, 10:54 AM IST

கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி,  ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில்  குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன. 

இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை உட்கொண்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். 

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு; தமிழ் ஆசிரியர் மீது பெண் பரபரப்பு புகார்

வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் யானைகள் நுழைந்தது ஊர்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழா; வரலாறு காணாத அளவில் சிறப்பாக நடத்த ஏற்பாடு - அமைச்சர் தகவல்

அதே சமயம் வனப்பகுதிகளுக்கு உள்ளேயே காட்டுவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios