Asianet News TamilAsianet News Tamil

மதுரை சித்திரை திருவிழா; வரலாறு காணாத அளவில் சிறப்பாக நடத்த ஏற்பாடு - அமைச்சர் தகவல்

மதுரை சித்திரை திருவிழாவை வரலாறு காணாத வகையில் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

chithirai festival minister sekar babu inspect with government officials in madurai
Author
First Published Apr 27, 2023, 9:36 AM IST | Last Updated Apr 27, 2023, 9:36 AM IST

உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஆழ்வார்புரம் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி, வெங்கடேசன், எம்.பி.சு.வெங்கடேசன்,  மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு விழாவின் போது முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இரு பக்தர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு விழாவிற்கான முன்னேற்பாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மதுரை கள்ளழகர், மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வின் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள், திருக்கல்யாண நிகழ்விற்கு 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

தேரோட்டம் செல்லும் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மருத்துவமுகாம்கள் அதிகரிப்பது, சிசிடிவி கேமிராக்கள் அமைப்பு, மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள், விஐபிகளுக்கு இந்த முறை கார் பாஸ் வழங்கவுள்ளோம். 

ஆட்சியர், அதிகாரிகள் புடைசூழ அடக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விஏஓ உடல்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. ஆற்றிற்குள் இறங்குவதற்காகாக ஆற்றை தூய்மைபடுத்தி ஒழுங்குபடுத்தி வருகிறோம். பூங்காக்கள், கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை இரவில் திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம்.

ஆற்றை தூய்மையாக வைத்தால் மட்டுமே பக்தர்கள் எளிமையாக சென்றுவருவார்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டு 800 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எந்தவித பணியும் விட்டுபோகாத வகையில் செயல்படவுள்ளோம். வருகின்ற கூட்டத்தை பொறுத்து யாரும் அச்சமின்றி வந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அனுமதி, மாட்டுவண்டிகளை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியின மாணவி கற்பழித்து கொடூர கொலை; குற்றவாளியிடம் ரகசிய இடத்தில் விசாரணை

1058 திருக்கோவில்களில் 1416 திருக்குளங்களுக்கு பராமரித்து வருகிறோம்,  இப்போதுவரை 87 குளங்களை மராமத்து பணிகளை செய்துள்ளோம். மன்னர் ஆட்சி கட்டமைப்பு உள்ளது. கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த ஆண்டு  ரோப்கார் பழனி, திருப்பரங்குன்றம், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 4 கோவில்களுக்கு விரைவில் ரோப்கார் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios